இடைத்தரகர் பிரச்சினை: திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி நடவடிக்கை


திருப்பதி: திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் நேற்று அதன் நிர்வாக அதிகாரி சியாமல ராவ் தலைமையில், போலீஸ், விஜிலென்ஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில்அதிகாரி சியாமல ராவ் பேசியதாவது:

ஏழுமலையானை தரிசிக்க வைக்கவும், திருமலையில் தங்கும்விடுதிகளுக்காகவும், ஆர்ஜித சேவைகளுக்காகவும், பக்தர்களை சிலர் நம்ப வைத்து மோசடி செய்துவருகின்றனர். சில தரகர்கள் இதில்தலையிட்டு, அதிக விலைக்கு டிக்கெட்டுகளை பெற்று தருவதாக கூறி கள்ள சந்தையில் டிக்கெட்டுகளை விற்று வருவதாகும் தகவல்கள் வருகின்றன. இவர்கள் மீது இன்னமும் ஒரு வாரத்துக்குள் நடவடிக்கைமேற்கொள்ளுங்கள். நிலுவையில் உள்ள விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சியாமல ராவ் பேசினார்