தேசிய தேர்வு முகமை அலுவலகம் முற்றுகை


புதுடெல்லி: நீட் தேர்வில் வினாத் தாள் கசிவு முறைகேடு புகார்கள் எழுந்தன. இதை கண்டித்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர்கள் யூனியன் (என்எஸ்யூஐ) அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர், டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களில் சிலர் அலுவலகத்துக்குள் நுழைந்து, அதன் கதவுகளை மூடி உள்புறமாக தாளிட்டனர். சிலர் வெளியே நின்றபடி தொடர்ந்து கோஷமிட்டர். இதனால் அங்கு நேற்று பரபரப்பு ஏற்பட்டது.