மாநிலங்களவையின் அவை முன்னவராக ஜெ.பி.நட்டா நியமனம் 


ஜெ.பி.நட்டா

புதுடெல்லி: மாநிலங்களவையின் 264-வது கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று (ஜூன் 27) அதன் அவை முன்னவராக பாஜகவின் தேசியத் தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெகத் பிரகாஷ் நட்டா நியமிக்கப்பட்டார்.

உறுப்பினர்கள் மேசையைத் தட்டி ஒலி எழுப்பியதற்கு மத்தியில், "மாநிலங்களவையின் அவை முன்னவராக ஜெகத் பிகராஷ் நட்டா நியமிக்கப்படுகிறார்" என மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பின் போது பிரதமர் நரேந்திர மோடியும் அவையில் இருந்தார். முன்னதாக, மாநிலங்களவை அவை முன்னவராக ஜெ.பி.நட்டாவை நியமிக்க பாஜக முடிவு செய்திருந்ததது. அந்த முடிவு மாநிலங்களவைக்கும் தெரிவிக்கப்பட்டது.