குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா பிறந்த நாள் வாழ்த்து


புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று தனது 66-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “குடியரசுத் தலைவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நம் நாட்டுக்கு ஆற்றும் சிறந்த சேவை மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கிறது அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், “குடியரசுத் தலைவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். நாட்டின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றி வரும் சேவை அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.

இதுபோல, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.