மாவோயிஸ்ட் கமாண்டர் ஜார்க்கண்டில் கைது


ராஞ்சி: ஜார்க்கண்டில் மாநிலத்தில் மாவோயிஸ்ட் கமாண்டர் ரவி கஞ்சு என்கிற ரவிஜி பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில், கும்லா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் மண்டலகமாண்டர் சோட்டு கெர்வா தலைமையிலான குழுவினர் செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. ஜல்கபட் மலைப் பகுதியில் போலீஸார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் மண்டல கமாண்டர் ரவிஜி கைது செய்யப்பட்டார்.

இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. ரவி கஞ்சுவிடம் இருந்துதினசரி உபயோகப் பொருட்கள் அடங்கிய பை மற்றும் மாவோயிஸ்ட் துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு கும்லா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார்.