மோடி 3.0 அமைச்சரவை இலாகா பொறுப்புகள் - முழு விவரம்


பிரதமர் மோடியின் ஆலோசனையின் அடிப்படையில், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகா பொறுப்புகளை ஒதுக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன் முழு விவரம்:

பிரதமர் - நரேந்திர மோடி: பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதியம்; அணுசக்தி துறை; விண்வெளித் துறை; அனைத்து முக்கிய கொள்கை விஷயங்கள்: பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்

கேபினெட் அமைச்சர்கள்:

1. ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு அமைச்சர்

2. அமித் ஷா - உள்துறை அமைச்சர்: கூட்டுறவுத் துறை அமைச்சர்

3. நிதின் ஜெயராம் கட்கரி - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்

4. ஜெகத் பிரகாஷ் நட்டா - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்: ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்

5. சிவராஜ் சிங் சௌஹான் - வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர்: மற்றும் ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர்.

6. நிர்மலா சீதாராமன் - நிதியமைச்சர் மற்றும் பெருவணிக நிறுவனங்கள் துறை அமைச்சர்

7. டாக்டர் சுப்பரமணியம் ஜெயசங்கர் - வெளியுறவுத் துறை அமைச்சர்

8. மனோகர் லால் - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர்: மின்சாரத்துறை அமைச்சர்

9. ஹெச் டி குமாரசுவாமி - கனரக தொழில்கள் துறை அமைச்சர்: மற்றும் எஃகு துறை அமைச்சர்

10. பியூஷ் கோயல் - வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்

11. தர்மேந்திர பிரதான் - கல்வி அமைச்சர்

12. - ஜித்தன் ராம் மாஞ்ஜி - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர்.

13. ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் - பஞ்சாயத் ராஜ் அமைச்சர்; மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை

14. சர்பானந்த சோனாவால் - துறைமுகங்கள் கப்பல் துறை மற்றும் நீர்வழித்துறை அமைச்சர்

15. வீரேந்திர குமார் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர்

16. கிஞ்ஜாரப்பு ராம்மோகன் நாயுடு - விமானப் போக்குவரத்து துறை அமைச்சர்

17. பிரல்ஹாத் ஜோஷி - நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர்; புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர்

18. ஜூவல் ஓரம் - பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்

19. கிரிராஜ் சிங் - ஜவுளித் துறை அமைச்சர்

20. அஷ்வினி வைஷ்ணவ் - ரயில்வே அமைச்சர்; தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர்: மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்

21. ஜோதிராதித்திய எம்.சிந்தியா - தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்; வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர்

22. பூபேந்தர் யாதவ் - சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர்

23. கஜேந்திர ராஜ் ஷெகாவத் - கலாச்சாரத்துறை அமைச்சர்; சுற்றுலாத் துறை அமைச்சர்

24. அன்னபூர்னா தேவி - மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

25. கிரண் ரிஜிஜூ - நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்; சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்

26. ஹர்தீப் சிங் பூரி - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர்

27. டாக்டர் மன்சுக் மாண்டவியா - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

28. ஜி.கிஷன் ரெட்டி - நிலக்கரித்துறை அமைச்சர்; சுரங்கத்துறை அமைச்சர்

29. சிராக் பாஸ்வான் - உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சர்

30. சி ஆர் பாட்டீல் - ஜல்சக்தித் துறை அமைச்சர்

இணையமைச்சர்கள் (தனிப்பொறுப்பு):

1. ராவ் இந்தர்ஜித் சிங் - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு); திட்டமிடுதல் துறை இணையமைச்சர்: (தனிப்பொறுப்பு); கலாச்சாரத்துறை இணையமைச்சர்

2. டாக்டர் ஜிதேந்திர சிங் - அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலக இணையமைச்சர்; பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர், அணுசக்தித் துறை இணையமைச்சர்; விண்வெளித்துறை இணையமைச்சர்,

3. அர்ஜூன் ராம் மேக்வால் - சட்டம் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு); சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர்

4. ஜாதவ் பிரதாப் ராவ் கன்பத் ராவ் - ஆயுஷ் அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு); சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர்

5. ஜெயந்த் சௌத்ரி - திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இணை அமைச்சர்கள் பட்டியல்:

ஜிதின் பிரசதா - வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர்

ஸ்ரீபத் யசோ நாய்க் - மின் துறை இணை அமைச்சர் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர்
பங்கஜ் சவுத்ரி - நிதித் துறை இணை அமைச்சர்
கிருஷ்ணன் பால் - கூட்டுறவு இணை அமைச்சர்
ராம்தாஸ் அத்வாலே - சமூக நீதி மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர்
ராம்நாத் தாக்கூர் - வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை இணை அமைச்சர்
நித்யானந்த் ராய் - உள்துறை விவகாரங்கள் இணை அமைச்சர்
அனுப்ரியா படேல் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, உரங்கள் மற்றும் ரசாயனத் துறை இணை அமைச்சர்

வி.சோமன்னா - ஜல் சக்தி மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர்
சந்திர சேகர் பெம்மாசனி - ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர்
எஸ்.பி. சிங் பாகல் - மீன்வளம் கால்நடை மற்றும் பால்வளத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர்
ஷோபா கரந்த்லாஜே - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர்
கிர்த்திவர்தன் சிங் - சுற்றுச்சூல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் மற்றும் வெளியுறவு விவகாரங்கள் துறை இணை அமைச்சர்
பி.எல்.வர்மா - உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் சமூக நீதி மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர்
சாந்தனு தாக்கூர் - துறைமுகங்கள், கப்பல்கள் மற்றும் நீர்வழிகள் துறை இணை அமைச்சர்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராக சுரேஷ் கோபி நியமிக்கப்பட்டுள்ளார்.

அஜய் தம்டா - சாலைப் போக்குவர்தது மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர்
பண்டி சஞ்சய் குமார் - உள்துறை விவகாரங்கள் துறை இணை அமைச்சர்
கம்லேஷ் பஸ்வான் - ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர்
பகிரத் சவுத்ரி - வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர்
சதீஷ் சந்திர தூபே - நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை இணை அமைச்சர்
சஞ்சய் ஷேத் - பாதுகாப்புத்துறை இணை அமைச்சர்
ரவ்னீத் சிங் - உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறை மற்றும் ரயில்வே இணை அமைச்சர்
துர்காதாஸ் உய்கி - பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர்

ரக்‌ஷா நிகில் கட்சே - விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை அமைச்சர்
சுகுந்தா மஜூம்தார் - கல்வி மற்றும் வட கிழக்கு மாகாண மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர்
சாவித்ரி தாக்கூர் - பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர்
தோஹன் சாஹூ - வீட்டு வளர்ச்சி ஊரக விவகாரங்கள் துறை இணை அமைச்சர்
ராஜ் பூஷண் சவுத்ரி - ஜல் சக்தி துறை இணை அமைச்சர்
பூபதி ராஜூ ஸ்ரீநிவாச வர்மா - கனரக தொழிற்சாலைகள் மற்றும் இரும்புத் துறை இணை அமைச்சர்
ஹர்ஷ் மல்ஹோத்ரா - கர்ப்பரேட் விவகாரங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர்
நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா - நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர்
முர்ளிதர் மோஹல் - கூட்டுறவு மற்றும் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர்
ஜார்ஜ் குரியன் - சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் மீன்வளம் கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர்
பபித்ரா மர்கேரிடா - வெளியுறவு விவகாரங்கள் மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர்

x