ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டதில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு


ரியசி: ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத் தில் சிவ் கோரி கோயிலுக்கு சென்றுவிட்டு கட்ரா நோக்கி யாத்ரீகர்கள்பேருந்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது பேருந்தை நோக்கி தீவிரவாதிகள் சுட்டனர். இதனால், பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பள்ளத்தாக்கில் கவிந்து விழுந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து ரியாசி மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் மொஹித்தா சர்மா கூறுகையில், “பேருந்தில் பயணம்செய்தவர்கள் அனை வரும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். மீட்புப் பணிகள் முடிவடைந்துவிட்டன. தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து சிவ் கோரி சன்னதி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது” என்று தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலுக்கு காங் கிரஸ் மூத்தத் தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

x