மக்கள் பிரச்சினைகளே முதன்மையானது என்பதை உத்தர பிரதேசம் தெளிவாக உணர்த்திவிட்டது: பிரியங்கா காந்தி


புதுடெல்லி: 2024 மக்களவை தேர்தலில் மக்கள்பிரச்சினைகளே முக்கியம் என்பதைஉத்தர பிரதேச மக்கள் தெளிவாக நாட்டுக்கும், ஆட்சியாளர்களுக்கும் உணர்த்தியுள்ளனர் என்று காங்கிரஸ் பொதுச் செயலர்பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:

உத்தர பிரதேச காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் வெற்றி வணக்கம். வெயிலிலும், புழுதியிலும் நீங்கள் கடுமையாக உழைத்ததைக் கண்டேன். கடினமான காலங்களில் எப்படி போராடவேண்டும் என்பதை உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன். உங்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுபெரும் அநீதி இழைக்கப்பட்டது. பலமுறை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டீர்கள். ஆனாலும் நீங்கள் யாருக்கும் தலைவணங்கவில்லை, பயப்படவில்லை. தேர்தல் பணியை நிறுத்தவில்லை.

உத்தர பிரதேச மக்கள் இந்ததேர்தலில் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர். நாட்டில் மக்கள்பிரச்சினைகளே முதன்மையானது என்பதை அவர்கள் உணர்த்திவிட்டனர். அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான உறுதியான செய்தியை இந்தியா முழுமைக்கும் உத்தரபிரதேச மக்கள் உணர்த்திவிட்டனர். விழிப்புணர்வுடன் இருக்கும் அம்மக்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி வெறும் 36 இடங்களை மற்றுமே வென்றது. இண்டியா கூட்டணி 43 இடங்களை கைப்பற்றியது. எதிர்க்கட்சிகள் கூட்டணி ஒட்டுமொத்த எண்ணிக்கையில் இது கணிசமான பங்களிப்பாகும்

x