சந்திரபாபுவுக்கு ஸ்டாலின் வாழ்த்து


கோப்புப்படம்

சென்னை: ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில், தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. இந்நிலையில், நேற்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘‘ஆந்திர மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகள். தங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும், வளர்ச்சியையும் தந்து, அம்மாநில மக்களின் கனவுகள், நம்பிக்கைகளை நிறைவேற்றட்டும்’’ என தெரிவித்துள்ளார்.