ஜூன் 4-ல் இந்தியாவில் புதிய விடியல் பிறக்கும்: ராகுல் காந்தி உறுதி


ராகுல் காந்தி | கோப்புப் படம்

மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. நேற்று இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட 'எக்ஸ்' பதிவு:

அன்பான சக குடிமக்களே, இன்றுதான் தேர்தலின் இறுதிக்கட்ட மற்றும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நாளாகும். இதுவரை நிகழ்ந்த வாக்குப் பதிவின் போக்கிலிருந்து இண்டியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கவிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. ஜனநாயகத்தையும் அரசமைப்பையும் தற்காத்திட வேண்டி கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் நீங்கள் அனைவரும் வாக்கு செலுத்த வந்துள்ளீர்கள்.

மேலும் பெரும் எண்ணிக்கையில் இன்று திரண்டு வந்து ஆணவம் மற்றும் அடக்குமுறையின் சின்னமாக விளங்கும் அரசாங்கத்துக்கு எதிரான உங்களுடைய இறுதி வீச்சை உங்கள் வாக்கு மூலம் கொடுங்கள். ஜூன் 4-ம் தேதி உதிக்கவிருக்கும் சூரியன் நாட்டுக்கு புதிய விடியல் தரவிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் கருத்தை பிரதிபலிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கூறியதாவது: அன்பு சகோதரி மற்றும் சகோதரர்களே, இன்றே தேர்தலின் இறுதிக்கட்டம். இண்டியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கப் போகிறது என்பது தெளிவாகிவிட்டது. உங்களுடைய அதிகபட்ச பங்கேற்பு இண்டியா கூட்டணிக்கு மேலும் வலுசேர்க்கும். உங்களுடைய அனுபவம், ஞானம் மற்றும் சிக்கல்களைப் பொருத்து பெரும் எண்ணிக்கையில் வாக்களியுங்கள். உங்களுடைய அரசியலமைப்புக்காக வாக்கு செலுத்துங்கள்.

உங்களுடைய ஜனநாயகத்துக்காக வாக்கு செலுத்துங்கள். அதன் வழியாக உங் உங்களுக்காக வேலை செய்யக்கூடிய அரசை உருவாக்குங்கள். இவ்வாறு அவர் கூறினார்.