உரிமை கோராத வைப்புத் தொகை ரூ.73,213 கோடி


புதுடெல்லி: இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை கடந்த மார்ச் நிலவரப்படி ரூ.78,213 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26% அதிகம்.

10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கில் இருக்கும் வைப்புத் தொகை ‘உரிமை கோரப்படாத வைப்புத் தொகை’ ஆகும்.

இதன்படி, 2023-ம் ஆண்டுமார்ச் நிலவரப்படி இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை ரூ.62,225 கோடியாக இருந்தது. 2024-ல் மார்ச்சில் இது ரூ.78,213 கோடியாக உயர்ந்துள்ளது. உரிமை கோரப்படாத வைப்புத் தொகையைஉரிய நபரிடம் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது.

x