துணைவேந்தர் ராஜினாமா: காமராஜர் பல்கலை. நிர்வாகத்தை கவனிக்க ‘கன்வீனர்’ கமிட்டி


பிரதிநிதித்துவப் படம்

மதுரை: துணைவேந்தர் ராஜினாமாவால் காமராஜர் பல்கலை நிர்வாகத்தை கவனிக்க, அரசு செயலர் அடங்கிய ”கன்வீனர்”கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த ஜெ.குமார் உடல் நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்தார். இன்னும் 10 மாதம் பதவி காலம் இருக்கும் நிலையில், அவர் ராஜினாமா செய்ததாலும், தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் இருப்பதாலும் உடனே புதிய துணை வேந்தரை தேர்ந்தெடுக்க முடியாத சூழல் உள்ளது.

இந்நிலையில், துணை வேந்தர் இல்லாத காலத்தில் பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனிக்க, அரசு செயலர் தலைமையில் 3 பேர் கொண்ட ”கன்வீனர்” கமிட்டி அமைக்க வேண்டும் என, சிண்டிக்கேட் கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, கல்லூரி கல்விச் அரசு செயலர் கார்மேகம் தலைமையில் உறுப்பினர்கள் தவமணி கிறிஸ்டோபர் ( தேர்ந்தெடுக்கப்பட்ட சிண்டிக்கேட் உறுப்பினர்) வாசுதேவன் ( ஆளுநர் பிரதிநிதி- சிண்டிக்கேட்) மயில்வாகனன் (பல்கலை கணித்துறை பேராசிரியர் ) ஆகியோர் அடங்கிய "கன்வீனர்" கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. புதிய துணை வேந்தர் நியமிக்கப்படும் வரையிலும், இக்கமிட்டியினருக்கே பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

x