டிஎன்பிஎஸ்சி நடத்திய பொறியியல் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு


சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் எழுத்துத் தேர்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் (நேர்காணல் பதவிகள்) 358 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 6, 7 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது.

இத்தேர்வில் கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு 1,132 விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.