எம்டிசி ஐடிஐ-யில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு


சென்னை: மாநகர போக்குவரத்துக் கழக ஐடிஐ-யில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக முதுநிலை துணை மேலாளர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: "மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் குரோம்பேட்டை ஐ.டி.ஐ-ல் 42-வது தொழிற்பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. இதில் சேர, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 40 வயது உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எம்டிசி முன்னாள், இந்நாள் பணியாளர்கள் வாரிசுகளுக்கு பயிற்சி கட்டணமில்லை. இதற்கான ஆவணங்களுடன் பணியாளர்கள் தங்களது பணிமனைகளில் இருந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஜூன் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதர விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10 ஆயிரம் பயிற்சி கட்டணமாக வசூலிக்கப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.