அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க மே 24 வரை அவகாசம்


சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் எஸ்.கார்மேகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி தொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க கடைசிநாள் மே 20 என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்னும் கூடுதல் மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 24-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.