பொறியியல் சேர்க்கை: 2 லட்சத்தை நெருங்கும் விண்ணப்பம்


சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 6-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் 15-வது நாளான நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பொறியியல் படிப்பில் சேர இதுவரை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 768 பேர் ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவுசெய்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 758 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும், 89,862பேர் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துவிட்டதாகவும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.