கிண்டி அரசு மகளிர் ஐடிஐ-யில் நேரடி சேர்க்கை: ஜூலை 15 கடைசி நாள்


சென்னை: கிண்டி அரசு மகளிர் ஐடிஐ-யில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவிகள் ஜூலை 15-ம் தேதி வரை பயிற்சியில் சேர்ந்துகொள்ளலாம். இது தொடர்பாக கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் என்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிண்டி அரசு மகiளிர் ஐடிஐ-யில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நேரடி சேர்க்கைஜூலை 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்துநடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள், இடையில் நின்றவர்கள் ஓராண்டு, 2 ஆண்டு தொழிற்பிரிவுகளில் சேரலாம். பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்படும்.

பயிற்சியில் சேர வயது வரம்பு இல்லை.பயிற்சியின்போது விலையில்லா சைக்கிள், பாடப் புத்தகம், 2 செட் சீருடை,பஸ்பாஸ் வழங்கப்படும். மேலும் மாதந்தோறும் ரூ.750 உதவித் தொகையும்உண்டு.

தகுதியுள்ள மாணவிகள் புதுமைபெண் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் கூடுதலாக ரூ.1,000 உதவித் தொகைபெறலாம். பயிற்சிக் கட்டணம் ரூ.200மட்டுமே. இந்த வாய்ப்பை பெண்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நேரடி சேர்க்கைக்கான கடைசி நாள் ஜூலை 15-ம் தேதி ஆகும். சேர்க்கை தொடர்பான கூடுதல்விவரங்களுக்கு 9094339616, 8668031248 எண்களில் தொடர்புகொள்ளலாம்.