என்சிசி படிப்புக்கு அங்கீகாரம் பெற யுஜிசி உத்தரவு


கோப்புப் படம்

சென்னை: என்சிசி பயிற்சியை பாடமாக பயிற்றுவிக்க கல்லூரிகள் அதற்கான அங்கீகாரத்தை சார்ந்த இயக்குநரகத்திடம் பெற வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

கல்லூரிகளில் என்சிசி பயிற்சிவிருப்பப் பாடப்பிரிவு பட்டியலில்2021-ம் ஆண்டில் சேர்க்கப்பட்டது. இதுதவிர, என்சிசி பாடப்பிரிவை பயிற்றுவிப்பதற்கான வழிகாட்டுதல்களும் பல்கலைக்கழக மானியக் குழுவால் (யுஜிசி) வெளியிடப்பட்டது.

இந்நிலையில், என்சிசி பாடமாகவழங்கும் கல்லூரிகள் அதற்கானஅங்கீகாரத்தை சார்ந்த இயக்குநரகத்திடம் பெற வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: உயர்கல்வி நிறுவனங்கள் என்சிசி பயிற்சியை பாடமாக வழங்குவதற்கு என்சிசி இயக்குநரகத்திடம் அங்கீகாரம் பெற்றிருப்பது அவசியமாகும். மேலும், தேசிய மாணவர் படையில் சேருவதற்கு பதிவு செய்தமாணவர்கள் மட்டுமே அதை விருப்பப் பாடமாக தேர்வு செய்துபயில முடியும். இதை கல்வி நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்