குருப்-4 தேர்வுக்கு விரைவில் கீ ஆன்ஸர்


சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறுபதவிகளில் 6,244 காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு கடந்தஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.

டிஎன்பிஎஸ்சி வெளியிடும்விடைகளின் (கீ ஆன்ஸர்)அடிப்படையில்தான் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்.

இந்நிலையில், கீ ஆன்ஸர் ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.