அரசு ஒதுக்கீட்டு எம்பிஏ, எம்சிஏ-வில் சேர விண்ணப்பிக்கலாம்


கோப்புப் படம்

சென்னை: தொழில்நுட்பக் கல்வி ஆணையர் கொ.வீரராகவ ராவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நடப்பு கல்வி ஆண்டில் (2024-2025) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறைகள், அதன் மண்டல மையங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

தகுதியுள்ள பட்டதாரிகள் www.tn-mbamca.com என்றஇணையதளத்தைப் பயன்படுத்தி ஜூலை 4-ம் தேதி வரைஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களைமேற்குறிப்பிட்ட இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்