ஜூலை 6 முதல் பருவ இறுதித் தேர்வுகள்: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை. அறிவிப்பு


சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பருவ இறுதித் தேர்வுகள் ஜூலை 6 முதல் செப்டம்பர் 29 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் பதிவாளர் கு.ரா.செந்தில்குமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக 2024 பருவ இறுதித் தேர்வுகள் ஜூலை 6-ம் தேதி முதல் செப்டம்பர் 29 -ம் தேதி வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் தவிர) அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் நடைபெறும்.

தேர்வு அட்டவணை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnou.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட் தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக ஆன்லைனில் வெளியிடப்படும். செய்முறைத் தேர்வுக்கான தனி ஹால்டிக்கெட்டும் ஆன்லைனில் வழங்கப்படும்" என தெரிவிக்கப் பட்டுள்ளது