பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கை: ஜூன் 10-ல் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முதல்கட்ட கலந்தாய்வு


உடுமலை: உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் 2024 - 2025ம் கல்வியாண்டு பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 10 முதல் ஜூன் 13ம் தேதி வரை நடைபெறும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன. இளநிலைப் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்ட கலந்தாய்வில் பல்வேறு இளநிலை பாடப் பிரிவுகளில் சிறப்புப் பிரிவின்கீழ் 29 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பொதுப் பிரிவின் கீழ் கலை, அறிவியல், வணிகவியல் துறை மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்டக் கலந்தாய்வு தரவரிசைப்படி நடைபெறும்.

தரவரிசை எண் 1 முதல் 1000 வரை உள்ள மாணவர்களுக்கு 10.06.2024 அன்று முற்பகலிலும் தர வரிசை எண் 1001 முதல் 2000 வரை உள்ள மாணவர்களுக்கு 10.06.2024 அன்று பிற்பகலிலும் தரவரிசை எண் 2001 முதல் 3000 வரை உள்ள மாணவர்களுக்கு 11.06.2024 அன்று முற்பகலிலும் தரவரிசை எண் 3001 முதல் 4000 வரை உள்ள மாணவர்களுக்கு 11.06.2024 அன்று பிற்பகலிலும் தரவரிசை எண் 4001 முதல் 5000 வரை உள்ள மாணவர்களுக்கு 12.06.2024 அன்று முற்பகலிலும் நடைபெறும்.

தரவரிசை எண் 5001 முதல் 6000 வரை உள்ள மாணவர்களுக்கு 12.06.2024 அன்று பிற்பகலிலும் தரவரிசை 6001 முதல் 7103 வரை மாணவர்களுக்கு 13.06.2024 அன்று முற்பகலிலும் நடைபெற உள்ளது. மேலும், தரவரிசை எண் 1 முதல் 7103 வரை உள்ள மாணவர்களுக்கு 13.06.2024 அன்று நண்பகல் 12.00 மணியளவில் தமிழ் இலக்கியப் பாடப் பிரிவிற்கும் ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவிற்குமான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மாணவர்கள் தங்கள் தரவரிசையை அறிந்து கொள்ள கல்லூரி இணையதளத்தைப் (www.gacudpt.in) பார்வையிடவும். மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வுக்குத் தகுதியுடையோருக்கு அவர்களுடைய கைபேசிக்கு குறுஞ்செய்தி (sms) அனுப்பப்பட்டுள்ளது. இத்தகவலை கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி தெரிவித்துள்ளார்.

x