மனைவியை மரக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவன் தலைமறைவு @ ராமேசுவரம்


ராமேசுவரம்: ராமேசுவரத்தில் மனைவியை மரக்கட்டையால் அடித்துக் கொன்று விட்டு தலைமறைவாகி இருக்கும் கணவனை போலீஸார் தேடி வருகின்றனர்.

ராமேசுவரம் புலித்தேவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (45). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி காளீஸ்வரி (40). இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.வீட்டில் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு முருகன் குடி போதையில் மனைவி காளீஸ்வரியை மரக்கட்டையை வைத்து தலையில் தாக்கியுள்ளார். இன்று காலை அருகிலிருந்த அவரது உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது காளீஸ்வரி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த துறைமுகம் போலீஸார் காளிஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முருகன் மீது கொலை வழக்கு பதிவு செய்து தலைமளைவாகி உள்ள அவரை தீவிரமாக போலீஸார் தேடி வருகின்றனர்.