சென்னை | போதை மாத்திரை கொடுத்து 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது


சென்னை: 16 வயது சிறுமிக்கு போதை மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை, மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் வரவேற்பாள ராக 16 வயது சிறுமி ஒருவர் பணிசெய்து வந்தார். அவரை திருவள்ளூர் மாவட்டம் கொன்னஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நாத் (20) என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்துள்ளார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட சிறுமிக்கு, அருகில் வசிக்கும் பிரியா என்ற பெண் மூலம் சுபா, கீர்த்தி ஆகியோரின் நட்பு கிடைத்துள்ளது.

இதற்கிடையே, சிறுமிக்கு சிறியளவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனது தோழியான கீர்த்திவீட்டுக்கு சென்றுள்ளார். அவர்உடல்நலக்குறைவுக்கு மாத்திரை கொடுப்பதாகக் கூறி அதனுடன்போதை மாத்திரையையும் கொடுத்துள்ளார். அவற்றை உட்கொண்ட சிறுமி அங்கேயே மயங்கியுள்ளார்.

இதையறிந்து அங்கு வந்த நாத், சம்பந்தப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்து இதை அறிந்த சிறுமிஅதிர்ச்சி அடைந்தார். மேலும்நாத் கொடுத்த ஆலோசனைப் படி சிறுமிக்கு போதை மாத்திரை கொடுத்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து ஸ்ரீநாத்தை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுபா,கீர்த்தி உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.