சென்னை | முன் விரோதத்தால் கொலை செய்ய திட்டம்: 3 பேர் கைது


சென்னை: பேசின் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை மறித்து போலீஸார் சோதனை நடத்தியபோது, 3 கத்திகள் இருந்தன. இதையடுத்து, ஆட்டோவில் வந்த சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்து விசாரித்தனர்.

ராயப்பேட்டை ரோட்டரி நகரைசேர்ந்த ஜோயல் மற்றும் நரேந்திரன் தரப்புக்கு இடையே ஏற்பட்டதகராறில் ஜோயல், கத்தியால் நரேந்திரன் கையை வெட்டியுள்ளார். அதைதொடர்ந்து நரேந்திரன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நரேந்திரனை கொலை செய்ய ஜோயல் திட்டமிட்டு, அதன்படி ரவுடி சிவசங்கர்தலைமையில் 8 பேர் கொண்ட கும்பல் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்று மருத்துவமனையில் உள்ள நரேந்திரனைக் கொலை செய்ய இருந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.