சென்னை | ஒரு நம்பர் லாட்டரி விற்பனை: கூட்டாளியுடன் பாஜக பிரமுகர் கைது


சென்னை: தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரிகளை விற்பனை செய்ததாக சென்னையில் பாஜக பிரமுகர் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை எம்ஜிஆர் நகர், சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் என்ற குல்லா விஜி (30). மாநில பாஜக விருகம்பாக்கம் மண்டல செயலாளராக உள்ளார். இவரும் இவரது நண்பரான எம்ஜிஆர் நகர், காந்தி தெருவைச் சேர்ந்த பாண்டியராஜன் (28) என்பவரும் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரிகளை ஆன்லைனில் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புகாரின் பேரில் எம்ஜிஆர் நகர் போலீஸார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். இதில், ஒரு நம்பர் லாட்டரிகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.