ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை @ கோவை


கோவை: கோவை இடையர்பாளையம் நீலியம்மன் நகரைச் சேர்ந்த முத்துக்குமார்(37), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். செல்போன் வாயிலாக ஆன்லைன் ரம்மி, கிரிக்கெட் விளையாட்டுகளில் ஈடுபட்ட முத்துக்குமார், அவற்றில் தொடர்ச்சியாக பணத்தை இழந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த கடந்த 9-ம் தேதி இரவு வீட்டில் வழக்கம்போல உறங்கச் சென்ற முத்துக்குமார், ஓர் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த கவுண்டம்பாளையம் போலீஸார் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான முத்துக்குமார் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததும், பலரிடம் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதும், தொடர் தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.