“என் தலையெழுத்து... இதையெல்லாம் பின்பற்ற வேண்டியுள்ளது” - டிடிஎஃப் வாசன் புலம்பல்


டிடிஎஃப் வாசன்

மதுரை: "எல்லாம் என் தலையெழுத்து; வேறு வழியில்லை, இதையெல்லாம் பின்பற்ற வேண்டியுள்ளது" என மதுரை காவல் நிலையத்தில் நீதிமன்ற உத்தவின்படி கையெழுத்திட வந்த பைக் ரேசர் டிடிஎஃப் வாசன் புலம்பியுள்ளார்.

கடந்த 15-ம் தேதி பைக் ரேசர் டிடிஎஃப் வாசன் மதுரை வழியாக திருச்செந்தூருக்கு காரில் சென்றார். அப்போது மதுரை மஸ்தான் பட்டி சுங்கச்சாவடி அருகே சென்றபோது, செல்போன் பேசியபடி கவனக் குறைவாக காரை ஒட்டியதாக அவர் மீது மதுரை அண்ணாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் கைதாகி அன்றைய தினமே நிபந்தனை ஜாமீன் பெற்ற டிடிஎஃப் வாசன் நீதிமன்ற உத்தரவுப்படி, மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில், 7-வது நாளான இன்று காலை அவர் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். முன்னதாக, அவர் காலை 10 மணிக்கு வர வேண்டிய நிலையில் 10.20 மணிக்கு வந்தார். அப்போது அவரை குறித்த நேரத்துக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என காவல் துறையினரின் எச்சரித்தனர். காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு திரும்பிய வாசன், "எல்லாம் என் தலையெழுத்து... வேறு வழியில்லை; இதையெல்லாம் பின்பற்ற வேண்டியுள்ளது" என சலிப்புடன் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.