ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்து 13 பேர் உயிரிழப்பு


போபால்: மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டம் குலாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர், ராஜஸ்தான் மாநிலம் மோடிப்புரா கிராமத்தில் நடைபெற்ற திருமணத்துக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் டிராக்டரில் திரும்பிக் கொண்டிருந்தனர். பிப்லோடி என்ற பகுதியில் இரவு 8 மணிக்கு டிராக்டர் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் டிராக்டரின் டிராலியில் அமர்ந்து பயணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர். 15 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் போபாலிலுள்ள அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.