என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை ஓய்வு


திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதல் எஸ்.பி.,யாக பணியாற்றிய என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை ஓய்வு பெற்றார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் ‘சல்யூட்’ அடித்து என்கவுன்ட்டர் ஸ்பெஷ லிஸ்ட் கூடுதல் எஸ்.பி., வெள்ள துரை நேற்று முன்தினம் இரவு ஓய்வு பெற்றார்.

திருவண்ணாமலை மாவட்ட குற்றப் பதிவேடு பிரிவு கூடுதல் எஸ்.பி.,யாக பணியாற்றி வந்தவர் வெள்ளதுரை. சென்னை, அயோத்தி குப்பம் வீரமணி உள் ளிட்ட ரவுடிகளை என் கவுன்ட்டர் மூலம் வீழ்த்தினார். மேலும், சந்தன மரம் கடத்தலில் ஈடுபட்டு வந்த வீரப்பனை பிடிப்பதற்கு முக்கிய கருவியாக செயல்பட்டார்.

இந்நிலையில், ரவுடி கொக்கி குமார் மரண வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் நிலையில், அப்போது மானாமதுரை துணை காவல் கண்காணிப் பாளராக பணியாற்றிய வெள்ளதுரை மீதான குற்றச்சாட்டை மேற்கொள்காட்டி, பணி நிறைவு பெறும் நாளில் உள்துறை செயலாளர் அமுதா நேற்று முன்தினம் காலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு, காவல்துறையினர் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு நேற்று முன்தினம் இரவு திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி கேயனிடம் இருந்து ஓய்வு பெற்ற சான்றிதழை கூடுதல் எஸ்.பி.,யாக பணியாற்றிய வெள்ளத்துரை பெற்றுக்கொண்டார். பின்னர், அவரை காவல் துறையினர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

x