அதிதி ஷங்கர் - அர்ஜூன் தாஸ் இணையும் புதிய படம்: தொடங்கியது படப்பிடிப்பு!


சென்னை: ’நேசிப்பாயா’ படத்திற்கு அடுத்து நடிகை அதிதி ஷங்கர், நடிகர் அர்ஜூன் தாஸூடன் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். தற்காலிகமாக ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.‌ அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரிக்கிறார். இந்நிறுவனம் இதற்கு முன்பு ‘லவ்வர்’, ‘குட்நைட்’ படங்களைத் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இளைஞர்களைக் கவரும் வகையில் ஃபீல் குட் கதைக்களமாக இது இருக்கும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.