நடிகை வரலட்சுமிக்கு தாய்லாந்தில் திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்!


நடிகை வரலட்சுமிக்கு தாய்லாந்தில் கோலாகலமாய் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிக்கோலய்க்கும் இந்த மாத தொடக்கத்தில் சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பாஜக அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ரஜினி, சிவகார்த்திகேயன் எனத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர், சங்கீத், ஹல்தி என திருமணத்தை ஒட்டி அடுத்தடுத்த கொண்டாட்டங்கள் களைக்கட்டியது.

தாய்லாந்தில் நடந்து முடிந்த இவர்களது திருமணக் கொண்டாட்டப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. நிக்கோலய் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்துப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், அதை எல்லாம் பொருட்படுத்தாது நிக்கோலயுடன் திருமண வாழ்வில் இணைந்துள்ளார் வரலட்சுமி.

நடிகை வரலட்சுமி சிவப்பு நிற புடவை அணிந்திருக்க, வேஷ்டி சட்டையில் நிக்கோலய் இருக்கிறார். கடந்த வாரம் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், புகைப்படங்கள் இப்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.