மம்மூட்டி - கவுதம் மேனன் இணையும் புதிய படத்தின் பணிகள் தொடக்கம்!


இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி இணையும் புதிய படத்துக்கான பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

’காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ உள்ளிட்டப் பல படங்களை இயக்கியவர் கவுதம் மேனன். இடையில் நடிகராகவும் பல படங்களில் கலக்கியவரது இயக்கத்தில் சமீபத்தில் ‘ஜோஷ்வா இமைபோல காக்க’ படம் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அடுத்து மம்மூட்டியை வைத்து புதிய படம் இயக்க இருக்கிறார். இதன் பூஜை இன்று கொச்சியில் நடைபெற்று படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை நடிகர் மம்மூட்டியே தயாரிக்கிறார்.

நயன்தாரா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் எனச் சொல்லப்பட்டாலும் அதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள், தொழில்நுட்பக் குழுவினர் யார் என்பது குறித்தான விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். கவுதம் மேனன் இயக்கும் இந்த முதல் மலையாளப் படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.