சொகுசு கப்பலில் ‘டிடி ரிட்டர்ன்ஸ் 2’


சந்தானம் நடித்து, வெற்றி பெற்ற 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. நிஹாரிகாஎன்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள் மற்றும் ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்குகிறார்.

'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தை இயக்கிய எஸ்.பிரேம் ஆனந்த், இதையும் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் நடிகர், நடிகையர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

இதுகுறித்து பேசிய பிரேம் ஆனந்த், "'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளை கடந்த ஒரு வருடமாகத் தொடர்ந்து செய்துவந்தேன். சமீபத்தில் முடித்துள்ளோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து, ரசித்து மகிழும் படமாக இருக்கும். இதன் கதை சொகுசு கப்பலில் தொடங்கி தீவு ஒன்றில் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்ய, ஆஃப்ரோ இசையமைக்கிறார். இதன் பூஜை சென்னையில் நடைபெற்றது.