‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பை நிறைவு செய்தார் ராம்சரண்


இயக்குநர் ஷங்கர் ஒரே நேரத்தில் கமல் ஹாசன் நடிப்பில்‘இந்தியன் 2’, ராம் சரண்நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’ படங்களை இயக்கி வந்தார். ‘இந்தியன் 2’வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது.

‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அரசியல் த்ரில்லர் படமான இதில், கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், நவீன் சந்திரா, சுனில் உட்பட பலர்நடித்துள்ளனர். தமன் இசை அமைக்கும் இந்தப் படத்தின் கதையை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக ராம் சரண், தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் படப்பிடிப்பு 2021-ம்ஆண்டு தொடங்கியது.