அவுரங்கசீப் ஆக நடிக்கிறார் ராணா


மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை கதை ஏற்கெனவே சில முறை படமாக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் சந்தீப் சிங் இயக்கத்திலும் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு, 'தி பிரைட் ஆஃப் பாரத் - சத்ரபதி சிவாஜி மகாராஜ்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இந்திப் பட இயக்குநர் அமித் ராய் படம் இயக்குகிறார். இதில் ஷாகித் கபூர், சத்ரபதி சிவாஜியாக நடிக்கிறார்.

தில் ராஜூவுடன் இணைந்து வாக்கூ பிலிம்ஸ் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இதில் அவுரங்கசீப்பாக, ராணா நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.