ரி-ரிலீஸ் ஆகும் விஜய்யின் போக்கிரி, துப்பாக்கி


பிரபல ஹீரோக்களின் சூப்பர் ஹிட் படங்களை ரீ-ரிலீஸ் செய்வது இப்போது அதிகரித்து வருகிறது. இந்தப் படங்கள் இப்போதும் வசூல் குவித்து வருவதால் இந்தப் போக்கு அதிகரித்துள்ளது. நடிகர் விஜய் வரும் 22-ம் தேதி தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு, அவர் நடித்த ‘போக்கிரி’ படம் மறுவெளியீடு செய்யப்படுகிறது. கனகரத்னா மூவிஸ் சார்பில் எஸ்.சத்தியராமமூர்த்தி தயாரிப்பில் பிரபுதேவா இயக்கிய படம் இது.

இதில் அசின், வடிவேலு, நாசர், பிரகாஷ்ராஜ், நெப்போலியன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். 2007-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்தப் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்நிலையில் வரும் 21-ம் தேதி ரீ- ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து ஹிட்டான ‘துப்பாக்கி’ படமும் 21-ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.