'ஆக்‌ஷன் கிங்' கதையில் துருவா சார்ஜா


‘ஆக்‌ஷன் கிங்' அர்ஜுன் கதை, திரைக்கதை எழுதியுள்ள 'மார்ட்டின்' படத்தில் அவர் மருமகன் துருவா சார்ஜா ஹீரோவாக நடிக்கிறார். ஏபி. அர்ஜுன் இயக்குகிறார். பாடல்களுக்கு மணி சர்மாவும் பின்னணி இசையை ரவி பஸ்ரூரும் அமைத்துள்ளனர்.

வாசவி என்டர்பிரைசஸ் மற்றும் உதய் கே மேத்தா புரொடக்ஷன் சார்பில், உதய் மேத்தா மற்றும் சூரஜ் உதய் மேத்தா தயாரிக்கின்றனர்.

இதில் வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சுக்ருதா வாக்லே, அச்யுத்குமார், நிகிதின் தீர் உட்பட பலர் நடிக்கின்றனர். பிரம்மாண்ட ஆக்ஷன் படமான இது, அக். 11-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.