கும்பம் ராசியினருக்கான வார பலன்கள் @ மே 16 - 22 


கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் - சுக ஸ்தானத்தில் சூரியன், குரு - அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன்பு ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல்கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சிறுவிஷயத்திற்கு கூட உணர்ச்சிவசப்பட்டு பேசுவதினால் பிரச்சினைகள் எழக்கூடும். பழைய கடன்களை முற்றிலுமாக அடைத்து மனநிம்மதி பெறுவீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாதது மனவருத்தத்தை தரும். மொத்தத்தில் அதிருப்தியான வாரமிது. தொழில்துறையினர் முன்னேற்றம் அதிகமாக லாபம் என அனைத்தையும் இந்த வாரம் எதிர்பார்க்கலாம்.

அவ்வப்போது மனச்சோர்வு ஏற்பட்டு மறையும். கொடுக்கல்-வாங்கலில் இந்த வாரம் ஈடுபடவேண்டாம் அதனால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது அதிககவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக் கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும்.

திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மேற்கல்வி பயில விரும்பும் மாணவ மாணவியருக்கு அதற்கான வாய்ப்புகள் தேடி வரும். அதை எதிர் கொள்வதன் மூலம் சிறந்த எதிர்காலம் காத்துள்ளது. பெண்களுக்கு பிரச்சினையில்லாத வாரம் இது.

பரிகாரம்: பெருமாளுக்கு வெண்தாமரையால் அர்ச்சனை செய்து மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட வாழ்வில் வளம் பெறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும் | அதிர்ஷ்டகிழமைகள்: வியாழன், சனி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே.