விருச்சிகம் ராசியினருக்கான வார பலன்கள் @ மே 16 - 22


விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் - களத்திர ஸ்தானத்தில் சூரியன், குரு - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் குடும்ப வருமானம் நல்லபடி இருந்து வரும் செலவுகள் அனைத்தும் இந்த வாரம் கட்டுக்கடங்கி இருக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் தங்களுக்கு உற்சாகத்தை தரும். தக்க தருணத்தில் பிறருக்கு தாங்கள் உதவுவது அவர்களது ஆசியும் பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் முன்னேற்றம் எதையும் இந்தவாரத்தில் எதிர்பார்க்க முடியாது சிலருக்கு தாங்களே எதிர்பாராத வகையில் ஊர் மாற்றம் ஏற்படக்கூடும். அதனால் தாங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும். தொழில் உற்பத்தி நல்லபடி இருக்கும். வருமானம் திருப்தி தரும்.

புதிய அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வாரம் தாராளமாக மேற்கொள்ளலாம் சக பாகஸ்தர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நீண்ட நாளைய வழக்கு ஒன்று உங்களுக்கு சாதகமான தீர்ப்பை கொண்டு வரும்.

குடும்ப பொறுப்புகளின் காரணமாக உழைப்பு வழக்கத்தைவிட சற்று அதிகரித்து காணப்படும். அதனால் மனதில் விரக்தி உண்டாகும். மாணவமணிகள் சிறுசிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்மணிகள் குடும்பத்தில் எதிலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது அவசியம்.

பரிகாரம்: மஞ்சள் நிற பூக்களை கொண்டு குரு பகவானை வழிபடுங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், சனி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே.