துலாம் ராசியினருக்கான வார பலன்கள் @ மே 16 - 22 


துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், குரு - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் ஆரோக்கிய குறைபாடுகள் அனைத்தும் இப்போது சரியாகிவிடும். அதனால் மனம் நிம்மதி பெறும். பண வரவிற்கு குறைவிராது. செலவுகள் ஏற்பட்டாலும் தங்களால் அதை சமாளித்து விட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள்.

வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். தொழிலில் உற்பத்தி சுமாராக இருக்கும். வருமானமும் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. புதிய முயற்சிகளில் இறங்குவதை சற்று தள்ளிப் போடவும். வியாபாரத்தில் முன்னேற்றம் எதையும் இந்தவாரம் எதிர்பார்க்க முடியாது. எனவே பொறுமையாக இருந்து வருவது அவசியம்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. திருமண வயதில் உள்ள துலா ராசி அன்பர்களின் மனதிற்கு பிடித்த வரன் அமைந்து திருமணம் நிச்சயிக்கப்படும். வழக்குகள் இந்த வாரம் முடிவுக்கு வரும். மொத்தத்தில் மகிழ்ச்சியான வாரம்.

மாணவமணிகள் பள்ளிக்கு வரும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. பெண்கள் மனதில் விரக்தி மனப்பான்மை ஏற்படக்கூடும்.

பரிகாரம்: தினமும் துர்காதேவியை வணங்கி வாருங்கள். துர்காஷ்டகம் படியுங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வெள்ளி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே.