கன்னி ராசியினருக்கான வார பலன்கள் @ மே 16 - 22 


கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் வெளிநாடுகளில் வசித்து வரும் உறவினர்கள் இப்போது தங்கள் இல்லத்திற்கு வந்து செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். தாயாரின் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருவது நல்லது.

பணப் பொறுப்புகளில் உள்ளவர்கள் கூடுதல் கவனத்தை செலுத்தி வருவது அவசியம். எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி ஒன்று வரும். தொழிலில் புதிய விஸ்தரிப்பு திட்டங்களில் தடைகள் ஏற்படக்கூடும். ஆனாலும் தொழில் பாதிக்கப்படாது. தொழில் துறையினருக்கு நிலுவையிலிருந்த பணம் இப்போது கைக்கு கிடைப்பது சந்தோசத்தை தரும்.

குடும்பத்தில் பண வரவிற்கு குறைவு இராது. சென்ற வாரம் ஏற்பட்ட செலவுகள் எதுவும் இந்த வாரம் இருக்காது. குடும்ப ரீதியாகவோ அல்லது தொழில் சம்பந்தமாக முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அவற்றை வாரத்தின் பிற்பகுதியில் எடுக்கலாம்.

சகோதரருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தால் இப்போது சரியாகிவிடும். மாணவமணிகள் தாங்கள் சிரமப்படும் தருணத்தில் சக மாணவர்களிடம் உதவி கிடைப்பது மன ஆறுதலை அளிக்கும். பெண்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு ஏற்படும்

பரிகாரம்: புதன் கிழமைகளில் சீனிவாசப் பெருமாளுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே.