[X] Close

இது அல்லவா தேசம்!- பல்கலைக்கழக தேர்வுக்காக விமானங்கள் தாழ்வாக பறக்க தடைவிதித்த தென் கொரியா


for-this-exam-flights-were-suspended-planes-asked-to-maintain-altitude

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Nov, 2018 15:23 pm
  • அ+ அ-

அடடா இது அல்லவா தேசம் என சிலாகிக்க வைத்திருக்கிறது தேசிய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு கவனச்சிதறல் ஏற்படாமல் இருப்பதற்காக தென் கொரியா அரசு மேற்கொண்ட சாதாரண நடவடிக்கைகள்.

தென்கொரியாவில் தேசிய பல்கலைக்கழக தேர்வானது, மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

இந்த தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்களே எதிர்காலத்தில் அவர்களின் சமூக அந்தஸ்து, நல்ல பணியை நிர்ணயிப்பதாக உள்ளது. ஏன் திருமணத்திற்கு நல்ல வரன்கள் கிடைப்பதற்கும் இது ஒரு அடிப்படையாகப் பார்க்கப்படுகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்வு, தென் கொரியாவில் உள்ளூர் நேரப்படி காலை 8.40 மணிக்கு துவங்கியது. 
மொத்தம் 9 மணி நேரம் தேர்வு.  5 லட்சத்து 95 ஆயிரம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வின் முடிவுகள் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 

மாணவர்களுக்காக அரசு எடுத்த நடவடிக்கை என்னென்ன தெரியுமா?

* பங்குச் சந்தை உட்பட அனைத்து அலுவலங்கள் துவங்கும் நேரம் ஒரு மணி நேரம் தேர்வு நாளான இன்று மட்டும்  தள்ளிவைக்கப்பட்டது. 
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மாணவ மாணவிகள் போலீஸார்  வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

*  தேர்வில் முதல் அரை மணி நேரம்  English listening test நடைபெற்றது. இதற்காக ஒலி மாசுவை குறைக்கும் ஒரு முயற்சியாக தென்கொரிய விமான நிலையங்களில் 25 நிமிடங்கள் விமான புறப்பாடு மற்றும் வருகை நிறுத்தப்பட்டது. 

*  தென்கொரிய வான் பரப்பை கடந்து செல்லும் விமானங்கள் தாழ்வாக பறக்கவும் தடை விதிக்கப்பட்டது. 1

*  தேர்வுக்காக 134 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது. 

* காற்றில் புழுதி மாசு அதிகமாக தென்கொரியாவில் இருப்பதால், மாஸ்க் அணிந்து தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

இவ்வளவு வசதிகளுடன் கட்டுப்பாட்டுகளையும் அரசு விதித்தது.

தேர்வு முடியும் வரை பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற மாணவ மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 

பிராந்திய மாநாட்டுக்காக சிங்கப்பூர் சென்றுள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் அங்கிருந்து மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close