இந்தோனேசியாவில் 3 கால்கள், 4 கைகளுடன் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் குறித்த தகவலை 'அமெரிக்ன் ஜர்னல் ஆஃப் கேஸ் ரிப்போர்ட்ஸ்' இதழ் வெளியிட்டுள்ளது.
மிகவும் அரிதான நிகழ்வாக இந்தோனேசியாவில் பிறந்த இரட்டை குழந்தைகள் 3 கால்கள், 4 கைகளுடன் ஒட்டிப் பிறந்துள்ளனர். இத்தகைய இரட்டையர்கள் விஞ்ஞான ரீதியாக 'இஸ்கியோபகஸ் டிரிபஸ்' என்று அழைக்கப்படுகிறார்கள். இது இரண்டு மில்லியன் நிகழ்வுகளில் ஒன்றாகும்.
'ஸ்பைடர் ட்வின்ஸ்' என குறிப்பிடப்படும் இணைந்த இரட்டையர்கள் குறித்த தகவல் 'அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கேஸ் ரிப்போர்ட்ஸ்’-ல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இரட்டையர்கள் கடந்த 2018ல் பிறந்தனர். ஆனால், இது தொடர்பான செய்தி கட்டுரை 'அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கேஸ் ரிப்போர்ட்ஸ்’ இந்த வார இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 'இஸ்கியோபகஸ் டிரிபஸ்' இணைந்த இரட்டையர்கள் அரிதான மருத்துவ நிகழ்வுகள். இதுபோன்ற முந்தைய மருத்துவ சிகிச்சை அறிக்கைகள் பெரிதும் இல்லாததால் இவர்களை பிரிக்கும் அறுவை சிகிச்சையானது அதிக சிக்கலானதாகும் என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்றவர்கள் மேல் உடற்பகுதிக்கு பதிலாக உடலின் கீழ் பாதியால் இணைக்கப்பட்டவர்களாக வரையறுக்கப்படுகிறார்கள்.
60 சதவீதத்திற்கும் அதிகமான இதுபோன்ற நிகழ்வுகளில், இரட்டைக் குழந்தைகளில் ஒன்று இறந்துவிடுகிறது அல்லது இறந்து பிறக்கிறது. ஆனால் இந்த இரட்டை குழந்தைகள் அனைத்து முரண்பாடுகளையும் கடந்து தப்பிப் பிழைத்தனர்.
இரட்டை குழந்தைகளின் தனித்துவமான உடல் அமைப்பால் அவர்கள் எழுந்து உட்கார இயலாத நிலை ஏற்பட்டதால் முதல் 3 ஆண்டுகள் படுத்தே கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பின்னர், அறுவைசிகிச்சை நிபுணர்கள், மூன்றாவது காலை துண்டித்துவிட்டனர். இதனால் இரண்டு இணைக்கப்பட்ட கால்களுடன் இரட்டை குழந்தைகள், சுதந்திரமாக நிமிர்ந்து உட்காரும் வகையில் அவர்களின் இடுப்பு மற்றும் கால்களை நிலை நிறுத்தியாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு இரட்டையர்களுக்கு எந்த சிக்கல்களும் ஏற்படவில்லை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இரட்டையர்கள் பிரிக்கப்படவில்லை. மருத்துவர்கள் அத்தகைய சிக்கலான அறுவை சிகிச்சையை முயற்சிப்பார்களா என்பதும் தெரியவில்லை என 'அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கேஸ் ரிப்போர்ட்ஸ்’-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்
வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!
கடமை தவறிய இன்ஸ்பெக்டர், பெண் காவலர் சஸ்பெண்ட்... இளம்பெண் கொலை வழக்கில் பரபரப்பு!
கோவை பேருந்தில் சடலமாக மீட்கப்பட்ட ஐ.டி பெண் ஊழியர்... ஓட்டுநர், நடத்துநர் அதிர்ச்சி!