மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... என்னதான் நடக்கிறது இங்கிலாந்து ராஜ குடும்பத்தில்?


மன்னர் சார்லஸ் - பட்டத்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேத் மிடில்டன்

புற்றுநோய் பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனின் உடல்நிலை சீராக இருப்பதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் மன்னராக சமீபத்தில் சார்லஸ் முடி சூட்டிக்கொண்டார். 75 வயதான அவருக்கு சமீபத்தில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் கடந்த வியாழக்கிழமை ராணுவ பயிற்சி கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று இருந்தார். இதனால் நாட்டு மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.

இளவரசர் வில்லியம், இளவரசி கேத் மிடில்டன்

இந்த நிலையில், இளவரசர் வில்லியமின் மனைவி இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்தாண்டு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அடி வயிற்றில் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். சமீபத்தில் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலை குறித்த எந்த தகவலையும் அதிகாரபூர்வமாக அரச குடும்பம் அறிவிக்கவில்லை.

இங்கிலாந்து பட்டத்து இளவரசர் வில்லியம்

இந்த நிலையில், அந்நாட்டில் உள்ள ’ஐசில்ஸ் ஆஃப் சில்லி’ என்ற தீவு கூட்டத்திற்கு இளவரசர் வில்லியம் அரசு முறை பயணமாக வெள்ளிக்கிழமை வருகை தந்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்களை அவர் நேரில் சந்தித்து உரையாடினார். மேலும், மீனவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அவர் உரையாடினார்.

அவர்களிடம் பேசும் போது, ”நான் எனது குடும்பத்தினர் இல்லாமல் தனியாக இங்கு வந்திருப்பது அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் உங்களை எல்லாம் சந்தித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எனது மனைவி கேட் மிடில்டன் நன்றாக இருக்கிறார். அவர் மீது அன்பு காட்டும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.” என்று தெரிவித்தார் வில்லியம்ஸ். அரச குடும்பத்தில் மாமனார், மருமகள் என அடுத்தடுத்து புற்றுநோய்க்கு ஆளாகி இருப்பது இங்கிலாந்து நாட்டு மக்களிடையே பேசுபொருளாக மாறி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x