ஆஸ்திரேலியாவில் ஹரியாணாவைச் சேர்ந்த மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக ஹரியாணாவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஹரியாணா மாநிலம் கர்னாலில் உள்ள கக்சினா கிராமத்தைச் சேர்ந்தவர் நவ்ஜீத் சந்து(22). இவர் கடந்த 2022 நவம்பவர் மாதம் படிப்பு விசாவில் ஆஸ்திரேலியா வந்தார். அவர் மெல்போர்னில் எம்.டெக் பட்டப்படிப்பு படிப்பு வந்தார். அவருடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சில மாணவர்கள் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில், அவருடன் தங்கியிருந்த ஹரியாணாவைச் சேர்ந்த அபிஜித்(26), ராபின் கார்டன் (27) என்ற சகோதரர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி அபிஜித்தும், ராபினும் சேர்ந்து நவ்ஜீத்தை கத்தியால் சரமாரியாக குத்தினர். அதைத் தடுக்க வந்த ஒருவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விக்டோரியா போலீஸார் விரைந்து சென்று நவ்ஜீத் சந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மாணவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அபிஜித், ராபின் கார்டனைத் தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரையும் நேற்று போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நவ்ஜீத் சந்துவின் மாமா யஷ்வீர் கூறுகையில், வாடகை பிரச்சினையால் இந்த கொலை நடந்துள்ளது. நவ்ஜீத்துடன் தங்கியிருந்த ஹரியாணாவைச் சேர்ந்த மாணவர்கள் தான் கத்தியால் குத்தினர் என்றார். ஆஸ்திரேலியாவில், இந்திய மாணவர் அவரது நண்பர்களால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!
கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!
ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!
எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!
ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!