உலகின் மிகப் பெரிய ‘க்ரூஸ் கப்பல்’... வரும் 27-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்குகிறது!


க்ரூஸ் கப்பல்

உலகின் மிகப்பெரிய க்ரூஸ் கப்பல் வரும் 27-ம் தேதி தனது முதல் பயணத்தை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது கடலின் அழகை 220 டிகிரி கோணத்தில் ரசிக்க முடியும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

உலகின் மிகப்பெரிய க்ரூஸ் கப்பலான ‘ஐகான் ஆஃப் தி சீஸ்’ (Icon of the Seas) கப்பலைக் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ளன. பின்லாந்தில் தயாராகி இருக்கும் இந்தக் கப்பலானது உலகின் மிகப்பெரிய க்ரூஸ் கப்பலான ‘ஒண்டர் ஆஃப் தி சீஸ்’ (Wonder of the Seas) கப்பலைக் காட்டிலும் 6 சதவீதம் பெரியது.

இந்த கப்பல் 1,200 மீட்டர் நீளமும் 2,50,800 டன் எடையும் கொண்ட இந்தக் கப்பலில் 8,000 பேர் பயணிக்க முடியும். இதில் 2,350 பணியாளர்களும் அடங்குவார்கள்.

கப்பலின் அழகு வசீகரிக்கிறது

சுமார் 30 அடுக்குகள் கொண்ட இந்தக் கப்பலில், 6 பெரிய வாட்டர் ஸ்லைட்ஸ், 7 நீச்சள் குளங்கள், 9 நீர்ச்சுழல்கள் உள்ளன. கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் மக்களுக்கான முதல் சுற்றுலா பணத்தை ஜனவரி 27ம் தேதி முதல் துவங்க உள்ளது இந்தக் கப்பல்.

இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள கப்பலின் உரிமையாளரான ‘ராயல் கரீபியன் இண்டர்நேஷனல்’ (Royal Caribbean International) நிறுவனம், ‘கப்பலில் இருந்து கடலின் அழகை 220 டிகிரி கோணத்தில் ரசிக்க முடியும் என்றும், இந்த கப்பல் 7 நாள் பயண சேவையை 3 விதமாக அளிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

கப்பலின் முழு தோற்றம்

இந்த கப்பலில் சுமார் 28 வகையான ரூம்கள் உள்ளன. இதில், 82 சதவீதம் ரூம்களில் மூன்றுக்கும் மேற்பட்டோர் தங்க முடியும். இவற்றில், 70 சதவீதம் ரூம்களில் பால்கனி வசதியும் உள்ளது.

மிதக்கும் 5 ஸ்டார் ஹோட்டல் போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கப்பல் தற்போது இறுதிக்கட்ட ஆய்வுக்காக கரீபியன் தீவுக்குச் சென்றுள்ளது. சுமார் ரூ.200 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலில் மேலும் பல எண்ணற்ற வசதிகளும் உள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது?! போலீஸார் குவிந்ததால் பதற்றம்!

அயோத்தி ராமர் கோயிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்: மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்த 2 பேர் கைது!

x