மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் முதல் முறையாக 60 வயதான அலெஜான்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற வழக்கறிஞர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மிஸ் வோர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் உள்ளிட்ட உலக அழகிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அழகிப் போட்டிகளில் இளம் பெண்கள் மட்டுமே அதிகம் பங்கேற்கிறார்கள். அப்படியான பெண்களையே வெற்றியாளர்களாக அறிவிக்கிறார்கள். ஆனால், அர்ஜென்டினாவில் உள்ள பியூனஸ் அயர்ஸில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அதிக வயதுடைய பெண் வென்று சாதனை படைத்துள்ளார்.
முதன்முறையாக, 60 வயதான வழக்கறிஞர் ஒருவர் மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ் அழகிப் போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தப் போடடியில் 18 முதல் 73 வயதுடைய 34 பேர் போட்டியிட்டனர். அவர்களுடன் போட்டியிட்டு அலெஜான்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். பள்ளிப் படிப்பை முடிந்த ரோட்ரிகுயஸ், தனது தொழிலாக முதலில் பத்திரிகைத்துறையைத் தான் தேர்ந்தெடுத்தார் என்று நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. பின்னர், அவர் சட்டம் பிடித்து ஒரு மருத்துவமனையின் சட்ட ஆலோசகரானார்.
தற்போது அர்ஜெண்டினா தலைநகர் புவெனஸ் அயர்ஸ் மாகாணத்திற்கான பிரபஞ்ச அழகியாக 60 வயதில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, அழகிப் போட்டியில் மரிசா ரோட்ரிக்ஸ் வெளிப்படுத்திய நேர்த்தியும், நளினமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த வெற்றிக்கு பின் பேசிய அவர், "அழகுப் போட்டிகளில் அதிக வயதில் வென்றவர் என்ற முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதில் நான் மகிழ்ச்சிகொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!
700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!
ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்
ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!
தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்