அமெரிக்காவில் கார் விபத்து: இந்தியாவைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு


விபத்தில் உருக்குலைந்த கார்

அமெரிக்காவில் நிகழ்ந்த கார் விபத்தில் இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரெகாபன் படேல், சங்கீதபென் படேல், மணிஷாபென் படேல். இவர்கள் அமெரிக்காவில் வசித்துக் கொண்டிருந்தனர்.

விபத்து

இந்நிலையில் அங்குள்ள தெற்கு கரோலினாவின் கிரீன்வில் கவுண்டியில் ரெகாபன்படேல் உள்ளிட்ட மூவரும் சென்ற கார், அங்குள்ள பாலத்தின் மீது 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 3 பெண்களும் உயிரிழந்தனர்.

கிரீன்வில் கவுண்டி மரண விசாரணை அதிகாரி மைக் எல்லிஸ் கூறுகையில், "இந்திய பெண்கள் பயணித்த எஸ்யூவி கார், திடீரென 6 வழிச்சாலையின் அனைத்து பாதைகளையும் கடந்து, எதிர்பக்கத்தில் பாலத்திலிருந்து 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது.

தெற்கு கரோலினாவில் இந்தியர்கள் பயணித்த கார் விபத்து

மேலும், அங்குள்ள மரங்களிடையே கார் மோதி உருண்டது. இதில் காரில் பயணித்த 3 இந்திய பெண்களும் உயிரிழந்தனர். அவர்களது கார், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் இயக்கப்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் வேறு எந்த வாகனங்களும் சம்பந்தப்படவில்லை." என தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

x