ஜப்பானில் 379 பேர் பயணித்த விமானம் தரையிறங்கியபோது தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் ஹொக்கைடோவிலிருந்து டோக்கியோவுக்கு 379 பயணிகளுடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் 'ஜெஏஎல் 516’ விமானம் புறப்பட்டது. இந்த விமானம் டோக்கியோவின் ஹனெடா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பிடித்து எரிந்தது. தீப்பிடித்ததுடன் விமானம் தரையிறங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பானிய தேசிய ஒளிபரப்பு கழகமான 'என்எச்கே' இதுகுறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. ஹனெடா விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் விமானம் மற்றொரு விமானத்துடன் மோதியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஜப்பான் செய்தி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் புத்தாண்டு தினத்தில் 150-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரழிவிலிருந்து ஜப்பான் மீள்வதற்குள் அடுத்த துயர சம்பவமாக டோக்கியோவில் 379 பேர் பயணித்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
விமானம் நின்றதும், பயணிகள், விமான ஓட்டிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அங்கு தயார் நிலையில் இருந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து எவ்வாறு நேரிட்டது, இதில் பயணித்தவர்களுக்கு காயம் அல்லது உயிரிழப்பு நேரிட்டதா என்பது குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவரவில்லை. எனினும் இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
பிரதமர் விழாவில் சர்ச்சையை கிளப்பிய முதல்வர்... கொந்தளிக்கும் பாஜக!